Sunday, April 12, 2009

எப்போது விடியல்

வறுமையிலே உழன்று நிற்கும் -
உழவருக்கும்
கழனியிலே களைஎடுக்கும் -
கன்னியர்க்கும்
நாளெல்லாம் உழைத்து களைதிட்ட -
பாட்டாளிக்கும்
சுமை தூக்கி கேள்விக்குறியாய் வளைந்துபோன -
சுமை தூக்குவோர்கும்
மனித கழிவை மனிதனே சுமக்கும் -
தோட்டியர்க்கும்
பள்ளி செல்லாமல் பணிசெய்திடும் -
குழந்தை தொழிலாளருக்கும்
கூவ கரைதனிலே குடி இருக்கும் -
கூலி தொழிலாளருக்கும்
கைத்தரியிலே நெசவு செய்யும் -
நெசவு தொழிலாளிக்கும்
கடல் தண்ணீரிலே தத்தளிக்கும் -
மீனவருக்கும்
படித்தோரும் கூட நிராகரிக்கும் -
திரு நங்கையர்க்கும்
பட்டம் பெற்றும் வேலை இல்லா -
கற்றோருக்கும்
கற்றோரால் கை விடப்பட்ட -
பெற்றோருக்கும்
ஈழத்திலே தவித்து நிற்கும் என்னுயிர் -
தமிழனுக்கும்
எப்போது விடியல் ?எப்போது விடியல் ??
என்று ஏங்கி நிற்கும் இருளாக இல்லாமல்
இருள் அறுக்கும் விடிவெள்ளியாக மாறு
தமிழா தமிழா .

1 comment:

  1. வருக இளம்பரிதி பாண்டியன் அவர்களே!
    தரமான படைப்புகள் தமிழுக்கு தந்து தரணியில் ஈடில்லா புகழ் பெறுக!

    வாழ்த்துக்களுடன்
    கயல்விழி சண்முகம்

    ReplyDelete